தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து பசுமை சூழலை உருவாக்கியுள்ளது.
தாம்பரத்தில் இயங்கிவரும் தேசிய சித்த மருத்துவமனை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இதில் பல்வேறு மரங்கள் சூழ்ந்து பசுமையாக உள்ளது அதனை தற்போது ஒழுங்குபடுத்தி பராமரிக்க ஊழியர்களுக்கு தனியார் தொண்டு அமைப்பு பயிற்சிகளை வழங்கி உள்ளது.மேலும் மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமை சூழலை உருவாக்கவும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளை வகை பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்துதலை தனியார் தொண்டு அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.