கோவில்பட்டியில் ஜுனியர் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு .

கோவில்பட்டியில்  ஹாக்கி யூனிட்  ஆப் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி தேர்வு  வருகிற மார்ச் 26 மற்றும் 27ம் தேதி கோவில்பட்டி SDAT ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது மாநில அணி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.1.2003 க்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும் பிறப்புச் சான்றிதழ் , பத்தாவது பதிப்பெண் பட்டியல்,ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் எனவும் , தேர்வு செய்யப்படும் தமிழக அணி   மே 18 முதல் 29 வரை கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாட உள்ளனர் என்பதை ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் J.மனோகரன் செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


தமிழக தேர்வுக்குழு சேர்மன் ஒலிம்பியன் திருமாவளவன்  தலைமையில் வீரர்களின் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் முனைவர் குரு சித்ரசண்முக பாரதி செய்து வருகிறார் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post