உலகின் முதல் பன்றியின் இதயத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபரான டேவிட் பென்னட், மரணமடைந்தார். என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள மருத்துவமனையில் 57 வயதான பென்னட் செவ்வாய்க்கிழமை இறந்தார், மேலும் இறப்புக்கான சரியான காரணத்தை மருத்துவர்கள் அறிக்கையாக வழங்கினர்.
அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தின் யூனிவர் சிட்டி ஆஃப் மேரி லேண்ட் என்ற பகுதியில் 57 வயதான பென்னட் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதய நோய் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு இதயத்திற்குள் நுரையிரலுக்கும் இடையே ஒரு பைபாஸ் குழாய் முலம் தான் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. ஆனால் இவருக்கு விரைவில் முன்னுரிமை அடிப்படையில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் கிடைப்பது நடக்காத காரியம் அதனால் அவருக்கான தீர்வு குறித்து டாக்டர்கள் தேடும் போது இந்த பன்றி இதய ஐடியா உதித்தது. அதை டாக்டர்கள் அவரது அனுமதியுடன் செய்தனர்.
சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் பன்றியின் இதயம் இவருக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது. இது அப்போது மருத்து உலகின் சாதனையாக பார்க்கப்பட்டது. பின்னர் சிறிது நாட்கள் நலமுடன் இருந்த அவர் இன்று மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து புதன்கிழமை ஒரு அறிக்கையில், பல நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக மருத்துவமனை கூறியது, பென்னட் குணமடைய மாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு அவருக்கு சிறப்பான நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்கப்பட்டது.
"மிஸ்டர் பென்னட்டின் இழப்பால் நாங்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அவர் ஒரு துணிச்சலான மற்றும் உன்னதமான நோயாளி என்பதை நிரூபித்தார், அவர் இறுதிவரை போராடினார், ”என்று பால்டிமோர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பார்ட்லி கிரிஃபித் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.