திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டு தையல்இயந்திரம்,கல்விஉதவித்தொகை,வேளாண்உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர்பேசியதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிபொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுவருகிறது இல்லம்தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி மருத்துவமனைக்கு செல்லமுடியாது முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அரசுபேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் மூலம் மகளிர் பயணடைந்துவருகிறார்கள் என்றும் கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ராம்குமார்,ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம்,
திட்டை நகரமன்றதலைவர் வெண்ணிலா கோதண்டம்,துணைதலைர் விபிபி பரமகுரு,நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன்,மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி சுகுணாசங்கர்,வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,கார்த்திக்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபானி,சண்முகசிகாமணி,கவுண்சிலர் ரெங்க.சுரேந்தர் மற்றும் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post