திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் அருகே உள்ள வெள்ளமடத்துப்பட்டி பொதுமக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு

 திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் அருகே உள்ள வெள்ளமடத்துப்பட்டி  பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியதாவது,

 திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள வெள்ளமடத்துப்பட்டி ஏகேஜி காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்  கடந்த பல ஆண்டுகளாக சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.  அவர் மீதான நம்பிக்கையின் காரணமாக, வெள்ளமடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், அந்த பெண்ணிடம் சீட்டு சேர்ந்து உள்ளதாகவும் கடந்த ஆண்டு 2021 ஜனவரியில், எங்களுக்கு சேர வேண்டிய ரூ.12 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்து விட்டு தப்பிச் செல்ல முயன்றானர். இதனை அறிந்த நாங்கள், அவரை பிடித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து. அவர் மீது 22 நபர்கள் புகார் மனு கொடுத்தோம்.

அப்போது சமரசம் பேசிய காவல் துறையினர்  சிறிது கால அவகாசத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார் என உறுதி அளித்ததன் பேரில். அதனை ஏற்று நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். பணத்தைக் கொடுத்த அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் பணத்தை கேட்டபோது  பணத்தை திருப்பி தராததால் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டபோது, சம்மந்தப்பட்ட பெண்ணுடன் பேசி நீங்களை முடித்துக் கொள்ளுங்கள் என அனுப்பிவிட்டனர்.அதன்படி மீண்டும் சீட்டு நடத்திய பெண்ணிடம் சென்று கேட்டபோது, பணம் தர முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக தலையிட்டு எங்கள் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Previous Post Next Post