பவானிசாகர் புங்காரில், குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.!


பவானிசாகர் ஒன்றியம், புங்கார் ஊராட்சிக்குட்பட்ட புங்கார் காலனி பெரியார்நகர் பகுதி. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வருவது இல்லை என்றும், புதிய குடிநீர் திட்டத்திலும் புங்கார் காலனி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. பெரியார்நகர்க்கு இத்திட்டத்தில் குடிநீர் கிடைக்காது என்றும் கூறப்பட்டது. 


ஏற்கெனவே, கடந்த 17 ஆண்டுகளாக நிரந்தர குடிநீர் வசதி இல்லை. புதியதாக போடப்பட்டுள்ள சம்புக்கு பவானி ஆற்றின் ஓரப்பகுதியில் குழி வெட்டி, அத்தண்ணீரைத்தான்குடிநீர் உபயோகத்திற்கு எடுக்கப்பட உள்ளது. இதில் புங்கார் கிராமத்தில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவு நீரும் இந்த சம்பில் தான் இறங்கும். 

அத்தண்ணீரைத்தான் பில்டர் செய்து ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு விநியோகிக்கும். அத்தண்ணீரை எப்படி குடிப்பது என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.  குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறிய ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த பவானிசாகர் ஒன்றிய ஆணையாளர் மைதிலி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்  பாவேசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

கடைசியில் இன்னும் 15-நாட்களில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர இதனால், இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணிநேரம் பண்ணாரி-பவானிசாகர் இடையேயான வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி வழியாக பண்ணாரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் மைசூர் செல்லும் வாகன ஒட்டிகள் அவதிகுள்ளாயினர்.

Previous Post Next Post