கோவை சூலூர் பேரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று சூலூர் பேரூராட்சியின் 16வது தலைவராக தேவிமன்னவன் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை சுழற்சி முறையில் துறை வாரியாக சூறாவளியாக செயல்படுகிறார் தனது சக கவுன்சிலர்களின் முழு ஒத்துழைப்போடு.
அந்த வகையில் இன்று தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சூலூர் ஆர்விஎஸ் கலைக்கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை உருவாக்கி கிட்டத்தட்ட நூறு தனியார் நிறுவனங்கள் மூலம் 12000 காலியிடப் பணிகளுக்கு சூலூர் தாண்டி,கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 7500 இளைஞர்கள் பங்கேற்றுப் பயன்பெற்ற இந்நிகழ்ச்சியில்,உடனடியாக 1800 பேருக்கு முதல்கட்டமாக பணி நியமனம் கொடுக்கப்பட்டது, இரண்டாவது கட்டமாக 1200பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பற்ற, எண்ணற்ற இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மட்டுமல்ல,வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகவே இது அமைந்தது என்ற செய்தியை நம்மிடையே பகிர்ந்த சூலூர் திமுகழகத்தின் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன்,இதில் மணிமகுடமாக கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆர்விஎஸ் கலைக்கல்லூரியின் அறங்காவலர் செந்தில்கணேஷ்,வேலை வாய்ப்பு திட்ட இயக்குனர் கருணாகரன் ஆகியோருக்கும், சக கழக நிர்வாகிகளுக்கும்,ஏனைய கவுன்சிலர்களுக்கும்,சூலூர் பொதுமக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு , இன்றைய தினமானது ஏதோ ஒரு இனம் புரியாத மனம் குளிர்ந்த,இதயம் கனிந்த சந்தோஷத்தைத் தருவதாகவே உணர்வதாக,ஆனந்த பூரிப்போடு செய்தியைப் பகிர்ந்தார்.