தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மேலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:
மேலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இ-சேவை மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆகாயத்தாமரை தண்டு பகுதிகள் மதிப்பு கூட்டப்பட்டு அதிலிருந்து கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி
ஆந்திர மாநிலம் கிரியேடிவ் பீ நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் பங்குபெறும் சுய உதவி குழுவினர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவியாக இருக்கும் எனவே,
இப்பொருட்களை சந்தைப்படுத்த உரிய நடவடிக் மேற்கெள், சுய தலைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. உதவி குழுவினர் மற்றும் ஊராட்சி
மேலும், மேலாத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி அலுவலகத்தில் செயல்படும் பகுதி நேர நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களோடு, கூடுதலாக அரிய புத்தகங்கள் வைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேலாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள அடர்ந்த காடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பராமரிப்பது குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும், மேலாத்தூரில் செயல்பட்டு வரும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை, கழிப்பறை, சத்துணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு,
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுசுவர் அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஆத்தூர் அரசின் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு சத்துணவு மாணவர்களுடன் உணவின் தரத்தை குறித்து கேட்டறியப்பட்டது.
ஆய்வில் திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சுமதி, கிரியேடிவ் பீ பயிற்சியாளர் ரமணாதேவி, பணித்தள பொறுப்பாளர் சுதா, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆத்தூர் திருமதி.முத்துலட்சுமி, சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.