தூத்துக்குடி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஆக இருந்த சுடலைமுத்து என்பவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஆக இருந்தவர் சுடலைமுத்து இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
இதனை அடுத்து தூத்துக்குடி சண்முக புரத்தில் உள்ள இவரது வீட்டில் இன்று காலை தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, அனிதா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு காணப்படுகிறது.