ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது.இந்த அணை ஆசியாவிலேயேஇரண்டாவது மிகப்பெரிய மண் அணை ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேற்றப் படும் நீர் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களு க்கு குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2. 47 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங் களும் பயன் பட்டு வருகின்றன.
இங்கு முறையே அரக்கன்கோட்டை, தடப் பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க் கால், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு பவானி ஆறு மூலம் வரும் நீர் பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு, உபரிநீர் இந்த அணைக்கு வரும். மேலும் மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது. அணையின் மொத்த உயரம் 105 அடி.
தற்போது அணையில் 90.63 அடி உயரம் நீர் உள்ளது அணைக்கு நீர்வரத்து 1056 கனஅடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி விவசாயத்திற்கு 500 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்கு பவானி ஆற்றில் 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300
கனஅடி நீரும், மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து நீர். திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.