தாளவாடி அருகே பனஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

தாளவாடி அருகே பனஹள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பனஹள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் மார்ச் மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதனையடுத்து இன்று காலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள  அக்னி குண்டத்தில் கோவில் தலைமை பூசாரி  குண்டம் இறங்கினார்.பிறகுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்  கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Attachments area
Previous Post Next Post