இயற்கை விவசாயம் குறித்து கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்க உரை.!

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரம் பொம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம் மற்றும் விளக்கவுரை அளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு  பொம்மநாயக்கன்பாளையம் கிராம ஊர் தலைவர் S. பச்சியம்மாள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக S.சரவணகுமார் (Agronomy Scientist, KVK, Myrada), நடராஜ்( இயற்கை விவசாயி, சந்திராபுரம்), கோடிஸ்வரன்( இயற்கை விவசாயி, பொலவக்காளிபாளையம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உழவர் பெருமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். S. சரவணகுமார்  "வருமுன் காப்போம்" என்பதை முன்னிறுத்தி இயற்கை விவசாயத்தின் அனைத்து செயல் முறைகளையும் விளக்கினார்.

நடராஜ் தன்னுடைய ஏழு வருட இயற்கை விவசாய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் . மேலும் அனைவரும் தங்கள் தேவைக்காவது இயற்கை விவசாயம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். கோடிஸ்வரன் இயற்கை முறைகளை மேலாண்மை குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயத்தின் அவசியம், பூச்சி, நோய் மற்றும் களை மேலாண்மை குறித்து விளக்கினர். இடுபொருட்களின் தன்னிறைவு அடைந்தாலொழிய இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தினர். 

மேலும் ஐந்திலை கரைசல், வேப்பங்கொட்டை கரைசல் , 3G கரைசல் ,பஞ்சகாவியம், இயற்கை களைக்கொல்லி ஆகியவற்றிற்கு செயல்விளக்கம் வழங்கினர்.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post