தூத்துக்குடி - கோவை ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே துறை அமைச்சருக்கு மனு.!

கொரோனாவால்  நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோவை ரயிலை உடனடியாக  இயக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா  மனு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஸ்னவ்க்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை-நாகர்கோவில் விரைவு  ரயிலுடன் கோவை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் இணைத்து இயக்கப்பட்டது.  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடி  சென்றது. கொரோனாவால் 2 ஆண்டாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது.

இந்த  ரயிலில் 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு அடுக்கு  குளிர்சாதன பெட்டிகள், மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி ஒன்று, முன்  பதிவு இல்லா பெட்டி முன்புறம் இரண்டு, பின்புறம் ஒன்று என  இணைக்கப்பட்டிருந்தது. நிறுத்தப்பட்ட இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.  

ஈரோட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மேட்டூர் வரை செல்லும்  பயணிகள் ரயில், காலை 6.30 மணிக்கு ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்,  மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்,  ஈரோட்டில் இருந்து காலை, 7.40 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் இயக்கப்படும்  திருச்சி பயணிகள் ரயில், ஈரோட்டில் இருந்து மதியம் 1 மணிக்கு  இயக்கப்படும் திருநெல்வேலி பயணிகள் ரயில் போன்ற ரயில்கள் இயங்கி வந்தது நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post