அ.இ.அ.தி.மு.க.பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர், நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் - முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு


அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் தெற்கு, வடக்கு, புஞ்சை புளியம்பட்டி நகரம், சத்தியமங்கலம் வடக்கு, தெற்கு, கிழக்கு (கடம்பூர்) சத்திநகரம், அரியப்பம் பாளையம் பேரூர் கழகம், கே.என். பாளையம் பேரூர் கழகம். தாளவாடி கிழக்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் விருப்ப மனுவினை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கடலூர் வடக்கு  மாவட்ட, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், அதிமுக அமைப்புச்செயலாள ரும், முன்னாள்அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.ஆகியோரிடம்வழங்கினர்.

உடன் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் பண்ணாரி  எம்.எல்.ஏ மற்றும்  தேர்தல் ஆணையர்கள் அருகில் உள்ளனர்.






Previous Post Next Post