தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் பாரம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 1 மணி நேரத்திற்க்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குசால் நகரில் இருந்து கோவை நோக்கி பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது 26 வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக திடீரெனபழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு புறமும் அணிவகுத்து நின்றனஇதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். திம்பம் மலைப்பாதையில் தினசரி தொடரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.