போக்குவரத்து நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி

 மத்திய அரசை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் ஒரு சில இடங்களில் மிகக் குறைவான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில் தண்டையார்பேட்டையில் சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தாலும் திடீரென பயணிகளை கீழே இறக்கிவிட்டு போக்குவரத்து பணிமனைக்கு வண்டிகளை திருப்பி எடுத்துச் செல்வதால் பயணிகள் மேலும் அவதி அடைந்து வருகின்றனர்பல நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலையில் தவித்து நின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில் நாடு தழுவிய போராட்டம் என்று கூறி ஆளும் கட்சியைச் சார்ந்த போக்குவரத்து ஊழியர்களும் நிர்வாகத்தினரும் போக்குவரத்து நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் குற்றம் சாட்டினார்.அதனை மீறி அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்குவதற்காக வந்தால் போக்குவரத்து பணிமனையில் வாயில்களை அடைத்து கொண்டு வாகனங்களை கொடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அதிகாரிகளும் காவல்துறையினரும் துணை நின்று பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

இதே நிலை தொடருமானால் தமிழக அரசின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துவதாக அண்ணா போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Previous Post Next Post