தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் வேளாங்கண்ணி (46) என்பவர் இன்று (02.03.2022) வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது
அங்கு வந்த தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (24) என்பவர் முன்விரோதம் காரணமாக வேளாங்கண்ணியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வேளாங்கண்ணி அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்தார்.