உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாமல் இருந்த நிலையில், ரஷ்யாவின் வெளிநாட்டு வருவாயை குறைக்கும் விதமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட அனைத்து கச்சா எண்ணெய்களில் ரஷ்ய எண்ணெய் சுமார் 3% ஆகும் - இது ஐரோப்பிய அமெரிக்க நட்பு நாடுகளை விட மிகவும் குறைந்த அளவேயாகும் , ஒட்டுமொத்தமாக, ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் அமெரிக்க எண்ணெய் இறக்குமதியில் சுமார் 8% ஆகும்.
அமெரிக்காவில், கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கப்படலாம் என்ற செய்திகளால் நியூயார்க்கில் 4% உயர்ந்து பேரல் $124.21 ஆக இருந்தது.
அமெரிக்கா விதித்துள்ள தடையில் எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவை அடங்கும். ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.