உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி.!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை  மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில்  மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் செல்வி நிவேதிதா, செல்வி திவ்யபாரதி, செல்வி ஹரிணி, திரு. நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்தார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1500862097361895424?t=Aiuon2m0iCXQwOtc4DltWg&s=19

#Ukraine நாட்டிலிருந்து தாயகம் திரும்ப தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழக அரசின் தொடர் முயற்சியால் எல்லையை தாண்டியது முதல் அரசு அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும், வெளியேறுவதற்க்கு பெரும் உதவிகள் செய்ததாகவும் கூறிய அவர்கள், தமிழக, கேரள அரசுகள் போல வட மாநில அரசுகள் இத்தனை சிறப்பாக செயல்படவில்லை என முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் "இது அரசின் கடமை" என கூறியதுடன், மாணவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர தேவையான நடவடிக்கைளை நம் அரசு தொடரும். அங்கிருக்கும் ஒவ்வொரு மாணவரும் மீட்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு! என தெரிவித்தார்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post