தாளவாடி அருகே பையனபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

தாளவாடி அருகே பையனபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் தாய் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பையனபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் மார்ச் மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்மனுடைய ஆபரணப் பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை கோவிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள  அக்னி குண்டத்தில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினார்.பிறகுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்  கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Previous Post Next Post