"வரியெல்லாம் ரத்து செய்ய முடியாது! ,பாஜக-வினர் அறிவை திறந்து சிந்தியுங்கள்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

"காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால், யூடியூபில் அதை வெளியிடுங்கள். நாங்கள் ஏன் வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். பாஜக-வினர் உங்கள் அறிவை திறந்து சிந்தியுங்கள். யாரோ ஒருவர் சம்பாதிப்பதற்கு உங்களை போஸ்டர் ஒட்டச் சொல்கிறார்கள். உங்களை ஆட்டு மந்தைபோல் நடத்துகிறார்கள்!"என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தலைநகர் டெல்லியில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க வேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜகவை தாக்கினார். 

படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை குவித்து வரும் நிலையில், படத்தின் போஸ்டர்களை ஒட்டும் பணியை பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், பாஜக தலைவர்கள் கண்களைத் திறந்து உண்மையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ​​“நான் ஒரு நாளிதழில் படித்தேன், ஹரியானா பாஜக எம்எல்ஏ ஒருவர், ஒரு பூங்காவில் படம் இலவசமாக திரையிடப்படும் என்று அறிவித்தார். விவேக் அக்னிஹோத்ரி உடனடியாக கட்டார் சாப்பிற்கு ட்வீட் செய்தார், எம்.எல்.ஏ திரைப்படத்தை இலவசமாக திரையிட திட்டமிட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் எம்.எல்.ஏ.வை அதைச் செய்யுமாறு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தினார். சிலர் காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்து உங்களுக்கு போஸ்டர் ஒட்டும் வேலையை (பாஜக) கொடுத்துள்ளனர். கண்ணை திற, நீ என்ன செய்கிறாய், அவன் (அக்னிஹோத்ரி) காஷ்மீரி பண்டிட்டுகள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க, போஸ்டர் ஒட்டியிருக்கிறாய். அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள், உங்கள் கண்களைத் திறங்கள். அறிவை உபயோகியுங்கள் என்று காட்டமாக கூறினார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post