தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறைக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையரக செயல்பாட்டையும் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
சென்னையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், #COVID19 & பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளைப் பாராட்டினார். பின்னர் மாலை நிகழ்வில், 'வருமுன் காப்போம்' என்பதைச் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் கடைப்பிடித்து, குற்றங்கள் நடைபெறாதவாறு தடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் சிறப்பாகப் பணியாற்றியதற்காக- தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கும் விருதுகள் வழங்கி பேசிய முதலமைச்சர், "அடுத்த ஆண்டு இந்த விருதைத் தாங்களும் பெற வேண்டும் எனக் காவல்துறையில் உள்ள அனைவரும் பாடுபடுவார்கள் என நம்புகிறேன்" என கூறி விருதுகளை வழங்கினார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.