கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

ஏற்கெனவே ரஷிய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷிய ராணுவம் நேற்று நுழைந்தது.

கெர்சன் பகுதிகளில் உள்ள அரசுக் கட்டடங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திவந்தது. இந்நிலையில், கெர்சன் நகரை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைனின் கெர்சன் நகரில்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post