கோவை சூலூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசின் பொதுமக்களுக்கும், பொதுத்துறைக்கும் எதிரான மெத்தனப்போக்கைக் கண்டித்தும், கைவிடக்கோரியும் எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ்,சிஐடியு,எம்எல்எப்,ஏஐசிசிடியு,எஸ்டிடியு,எல்டியுசி போன்ற அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகளும் ஒருங்கிணைந்து,14 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்திநடைபெற்றஇந்தமாபெரும்ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியூசி சுப்பிரமணியம், எல்பிஎப் சண்முகம், சிஐடியு வேலுச்சாமி, ஐஎன்டியுசி ரவி, எம்எல்எப் சதிஷ், ஹெச்எம்எஸ் பழனிச்சாமி தலைமை தாங்கினர்.
முக்கிய கோரிக்கைகளான, தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் நான்கையும் கைவிடு, மின்சாரத் திருத்தச்சட்டத்தைத் திரும்பப்பெறு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்று, தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தப்பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக்குறைத்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான அனைத்துப்பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்து,சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை, தொழிலாளர்களைப் பாதுகாத்திடு, காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு,ஒப்புக்குச் சப்பாக இல்லாமல்,வாழ்வாதாரத் தேவைகளை வலியுறுத்தும் விதமாக,வலிகளை முன்வைத்து,அனைவரும் உணர்வோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக செய்திகளைப் பகிர்ந்தனர்.