ராமேஸ்வரம் கோயிலுக்கு தனது சொந்த செலவில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்த நகர்மன்றத் தலைவர் தலைவர்


ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆணைக்கிணங்க ராமேஸ்வரம் ராமநாதசாமி நான்கு ரத வீதியில் வர்த்தகர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களை கோவிலை சுற்றி நிறுத்துவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் 

வாகனம் நிறுத்துவது ஏதுவாக ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான்  தனது சொந்த நிதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுத்தம் செய்து வணிகர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்

 இந்நிகழ்வில்3வது வார்டு கவுன்சிலர் ஜே ஆர் எம் முருகன் 12வது வார்டு கவுன்சிலர் நா. சத்தியமூர்த்தி 15 வார்டு கவுன்சிலர் சங்கர் 14-வது வார்டு கவுன்சிலர் மக்கள் செல்வன் முகேஷ் குமார் மாவட்ட பிரதிநிதி சுந்தர்ராஜன் மற்றும் திமுக நகரக் கழக பாரதி ராஜன் முருகானந்தம் பாபா செந்தில் பிரகாஷ் காளிமுத்து சுரேஷ் ஜாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post