சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று அறியப்படாத தியாகிகள் வாழ்ந்த இடங்களை பிரதிபலிக்கும் வரைபடம் - ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியீடு.!*


நாடு, சுதந்திரம் அடைந்து 75வது நினைவு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று அறியப்படாத தியாகிகளை பெருமைபடுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், 

ஆவணப்படம் மற்றும் தியாகிகள் வாழ்ந்த இடங்களை பிரதிபலிக்கும் வரைபடத்தினை, மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், ஆவணப்படம் மற்றும் வரைபடத்தை வெளியிட காரணமாக இருந்த  உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன்,  

மற்றும் உதவியாக இருந்த முத்தலாங்குறிச்சி காமராசு, நெய்தல் ஆன்டோ மற்றும் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களை பாராட்டினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: 75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு,ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று வெளியுலகிற்கு அறியப்படாதவர்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் அதற்கு தேவையான நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக லுழரவரடிந மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Previous Post Next Post