கோவில்பட்டியில் புத்துயிர் ரத்ததானக் கழகம், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் புத்துயிர் ரத்ததானக் கழகம், மற்றும் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகிய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.புத்துயிர் ரத்ததானக் கழகச் செயலர் க.தமிழரசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல்முருகன் முன்னிலை வகித்தார்.
தொழிலதிபர் அபிராமிமுருகன் முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் முருகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். அதில் 15 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் பகத்சிங் ரத்ததானக் கழகத் தலைவர் காளிதாஸ், ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர் உத்தண்டராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் லட்சுமணன், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்