கிராமப்புற மக்களுக்கு கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சி.!


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவையில் இளங்கலை வேளாண்மை படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் அடங்கிய குழு, கோவை மாவட்டம் ஆனைமலை வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக,  தாத்தூர் கிராமத்தில் சமூக வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, பருவகால காலண்டர் மற்றும் வருமான அளவுகோல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மாணவர்கள், அவ்வூர் மக்களை அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதைய நிலையை வரைபடம் மூலமாக அவர்களையே அறிய வைத்து தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதனையும் விளக்கினர்.

Previous Post Next Post