பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பால்தர் காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக (ASI) பணியாற்றி வந்தவர் ராஜ் மங்கள் ராய். இந்த நிலையில், ஆர்யா நகர் பகுதியை சேர்ந்த அமிர்த யாதவ் (வயது 30) என்பவரை தடைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக விசாரணை நடத்த வேண்டும் என கூறி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதில், திடீரென அந்நபர் உயிரிழந்து விட்டார்.
https://twitter.com/fpjindia/status/1505228075214127108?t=zs3Mw5Ksw4AGRGcVc_P_bQ&s=19
யாதவ் இறந்த செய்தி பரவியதும், இந்திய-நேபாள எல்லையில் மேற்கு சம்பரானில் உள்ள காவல் நிலையத்தை கிராம மக்கள் தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் தாக்கினர். இதில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், போலீசார் மீதும் தாக்குதலை நடத்தினர். இதில், காயமடைந்த 4 போலீசார் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி ராய் உயிரிழந்து உள்ளார்.
"இந்த நபர் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் அடித்ததால் சரிந்து விழுந்தார்" என்று உள்ளூர்வாசிகளை மேற்கோள் காட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சிக்டா சட்டமன்ற உறுப்பினர் பிரேந்திர குப்தா கூறினார்.
இதன்பின் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தேனீ கடித்து உயிரிழந்து உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சப்டிவிசனல் மாஜிஸ்திரேட் தனஞ்செய குமார் கூறியுள்ளார்.
காயமடைந்த காவலர்கள் பங்கஜ் சிங், எம்.டி. அலி மியான், எம்.டி. சாதிக் மன்சூரி, பப்பு குமார் பாண்டே, திரிபுவன் சிங், பராஸ் யாதவ், பிஜேந்திர சிங், பவன் குமார் மற்றும் சிவேந்திர குமார் பண்டிட் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது