மார்ச் 2
கோவை மாவட்ட சூலூர் பேரூராட்சியில் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு சூலூர் பேரூராட்சி மாமன்றத்தில் செயல் அலுவலர் முன்னிலலயில் பதவியேற்பு விழா நடைபெற்றது இதில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணியில் 17 உறுப்பினர்களும், அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரும் மொத்தமாக 18 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர்
சூலூர் பொதுமக்கள் சூழ கலைகண்டது பேரூராட்சி மாமன்றம் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த தலைவர்கள், வணிக கூட்டமைப்பு பிரதிநிதிகள், சிறு குறு வியபாரிகள், அறநிலையத்துறை சார்ந்த குருமார்கள்,விளையாட்டு துறை சார்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து வாழ்த்திய, இந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவானது ஊர்த்திருவிழா போலவே காட்சியளித்தது, ஒரு புதிய கோணமாக (மாடலாக) மட்டுமல்ல ஒரு புதிய வரலாறாகவும் பார்க்கப்படுகிறது
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திமுகவின் சூலூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளரான மன்னவன், இனி நடைபெறப்போகும் சூலூர் பேரூராட்சியின் செயல் வடிவங்கள், தமிழகம் தாண்டி இந்தியாவுக்கே முன்மாதிரியாய் விளங்கும் என்பதில் ஆழ நம்பிக்கை கொள்கிறேன்
காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் செயற்புலிகள் மட்டுமல்ல ஏதாவது சாதிக்க வேண்டுமென ஒரு பொறியோடு, ஒரு வெறியோடு, தெறியாகக் களத்தில் நின்றவர்கள் - வென்றவர்கள் உங்களின் சமூக தாகத்தையும் வேகத்தையும் நான் உணர்ந்தாலும், கண்கூடாகக் களத்தில் பார்த்தாலும்,
என் சார்பில் நான் சொல்வது, மக்களோடு மக்களாக இருங்கள், அவர்கள் சொல்லும் சிறு சிறு குறைகளை பொறுமையாக காது கொடுத்துக் கேளுங்கள், இதை எப்படி, எங்ஙனம்,எவ்வாறு தீர்வு காண முடியும் என குழுவாக யோசியுங்கள், மக்களின் குறைகளைக் களையுங்கள்
உங்கள் வார்டுகளில் வாரம் ஒரு தெருவெனத் தேர்ந்தெடுத்து, சிறப்பான பணிகளை மக்களுக்கு செவ்வனே செய்வதோடு மட்டுமல்லாமல் குறிப்பெடுங்கள், மக்களுக்குக் குறிப்பிடுங்கள், ஒரு நாளும் மக்கள் மனதில் இருந்து நீங்கள் நீங்க மாட்டீர்கள் என்று உறுதியாக என்னால் இங்கே கூறமுடியும்
இன்று கொங்கு மண்டல மக்கள் எல்லோராலும் பேசக்கூடிய வரலாற்றுச் சொல்லான கிழக்கே மட்டுமே உதித்த சூரியனை மேற்கேயும் உதிக்கச் செய்வேன் என்று ஒரு வீனசபதத்தோடு வந்த தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உள்ளாட்சியில் நல்லாட்சி கொடுப்போம்
என நல்ல ஊக்கம் தரும் நமது தமிழக முதல்வருக்கும், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பரிசளித்த நமது சூலூர் பொதுமக்களுக்கும்,இந்த நல்ல நேரத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு,
நமது சூலூர் ஒரு சிறப்பான, தனித்துவமான,முதல்நிலைப் பேரூராட்சியாக நிகழ்த்திக் காட்டுவோம் பொதுமக்களாகிய உங்களின் உறுதுணையோடு என்றார் மகிழ்ச்சி பொங்க மன்னவன்
சிறப்பு செய்திக்காக
ஆ அர்ச்சுனன்
சூலூர் தொகுதி நிருபர்
தமிழ் அஞ்சல்