ஆடு திருடும் கும்பலிடம் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கிய எஸ்.ஐ. திடீர் ராஜினாமா.!*


தூத்துக்குடியில் ஆடு திருடும் கும்பலிடம் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யாமலிருக்க லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியான நிலையில்,புகாருக்கு உள்ளான சப்-இன்ஸ்பெக்டர் தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளது , தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் கங்கை நாத பாண்டியன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வந்தார். இவர் ஆடு திருடும் கும்பலை குண்டாசில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தனர்.



இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் நடவடிக்கை எடுத்து உள்ளதால் தனது பணிணை ராஜினாமா செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர்  கங்கைநாத பாண்டியன் தெரிவித்தார். பின்னர், தான் பணியாற்றிய விளாத்திகுளம் காவல் நிலையத்துக்கு வந்த  சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post