மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டார அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நிறைவு விழா.


சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டார அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நிறைவு விழா. நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோணமூலை, உக்கரம், கொமரபாளையம், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. 


இதில் ஊராட்சி அளவில் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இயற்கை வழி விவசாயத்தில் பயிரிடப்பட்டராகி, குதிரைவாலி,கருப்பு அவுனி, சாமை, மூங்கில் அரிசிமற்றும் இயற்கை விவசாய வழி பழங்கள், 

தானியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு விதமான உணவு பொருளை தயாரித்தும், பாரம்பரிய உணவுகளான கம்பு கொழுக்கட்டை, வரகு இட்லி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய தானியம், கீரை வகைகள், மாமிச உணவுகள், பழ வகைகள், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பச்சை காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை தயாரித்தும் போட்டியில் பங்கேற்றனர். 

சுய உதவிக்குழு பெண்கள் தயார் செய்த உணவு வகைகளை பார்வையிட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நடுவர்கள் சிறந்த பாரம்பரிய உணவுகளை தயாரித்த உக்கரம் ஊராட்சியை சேர்ந்த மகரந்த பூ, மாரியம்மன், பராசக்தி ஆகிய மூன்று மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு முதல் பரிசாக 1500 ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. 

மேலும் இரண்டாம் பரிசாக சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் காசோலையும்,  மூன்றாம் பரிசாக குத்தியாலத்தூர் ஊராட்சி மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 500 ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது. பின்னர் போட்டியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

போட்டி நிறைவு விழாவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழ பெருந் தலைவர் கே.சி.பி.இளங்கோ கோண மூலை ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்நாதன்(எ) குமரேசன், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல்வகாப், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மணிமாலா, மற்றும் மகளிர் திட்ட வட்டார திட்ட மேலாளர் இந்திரா உட்பட மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக சத்தியமங்கலம் செய்தியாளர் கே.நாராயணசாமி



.

Previous Post Next Post