மாட்டுச் சான சூட்கேஸில் வைத்து பட்ஜெட் தாக்கல்.! - சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் விசித்திரம் .!

சத்தீஸ்கர் மாநிலத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்) சட்டசபையில் தாக்கல் செய்தார். 

பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனி முயற்சி எடுத்து, பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சூட்கேஸில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்தார். பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பாகேல் வெளியிட்டுள்ளார். 

பட்ஜெட்டில், ராஜீவ் காந்தி பூமியில்லா கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு உதவித் தொகையை 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக உயர்த்துவதாக முதல்வர் பாகேல் அறிவித்தார். 

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைக்க அறிவிப்பதாக பாகேல் தெரிவித்தார். 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ஜனவரி 1, 2004 மற்றும் அதற்குப் பிறகு சத்தீஸ்கரில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வேலை செய்ய இரண்டு கோடி ரூபாய் சத்தீஸ்கர் வேலைவாய்ப்பு இயக்கத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

பட்ஜெட் ஆவணத்துடன் சட்டசபைக்கு முதல்வர் பாகேல் சென்ற பை மாட்டு சாணத்தால் ஆனது. அதில் 'கோமை வஸதே லக்ஷ்மி' என்று எழுதப்பட்டுள்ளது. மாநிலத்தில் கால்நடைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தெரிவித்தார்.

- அஹமத்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post