பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க "குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி" தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை பிறந்த நாள் முதல் கண்காணித்து, பிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவும்.