தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருங்கால பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:
பெண்கள் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்ற முதலில் தங்களுக்கு ஏற்படும் மனத்தடையை உடைக்க வேண்டும். உங்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து தடைகளையும் உடைத்தால்தான் உங்களுடைய அடுத்த தலைமுறை சிறப்பாக உருவாகுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
படிப்பதையும் தாண்டி உங்களுடைய திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்கு விஷயங்களை மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள வேண்டும். ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியாதது என்பது கிடையாது.
அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற மனஉறுதி வேண்டும். அப்பொழுதான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். இந்த கல்லூரியில் நீங்கள் படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகளில் பல சாதனைகளை செய்பவர்களாக நான் உங்களை பார்க்க வேண்டும்.
எல்லா சாதனைகளையும் செய்து காட்டுபவர்களாகவும், எல்லோருக்கும் உதாரணமாகவும் நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பெண்கள் தயாரிப்பில் உருவான கைவினைப்பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
மேலும், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கழிப்பறைகளை திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நெல்லை தொழில்நுட்ப கல்வி கோட்டம் சத்தியவாகீஸ்வரன், உதவி பொறியாளர் துரைசிங்கன், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், ஒன்றியச் செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.