தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!*


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் பசுவந்தனை ரோடு, அண்ணா பேருந்து நிலையம், மந்தித்தோப்பு ரோடு, லாயல் மில் காலனி, உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

 விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.


தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், 

தமிழகத்தில்  எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருக்கும் போதும் நம்பர் ஒன் கட்சியாக திகழ்வது அதிமுக தான். திமுகவே அசந்து போகும் அளவுக்கு கடந்த 4 நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருந்தது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் தொடரில் திமுக அரசின்  அவலங்களை நாங்கள் எடுத்துரைப்போம். இந்த அரசு செயல்படாத திட்டங்களை முன்வைப்போம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். ஆளும் கட்சி கவனத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்கிறோம் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சி வந்ததும் ரத்து செய்துள்ளனர். குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதற்கு மக்கள் மன்றத்தில் அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும். 1980களில் திமுகவினர் கூறிய வசனம் ஞாபகப்படுத்து விதமாக அமையும்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது, என்றார்.


இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்யா, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், காந்தி என்ற காமாட்சி, எட்டயாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜகுமார்,

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, கவியரசு, வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், வார்டு கிளை செயலாளர்கள் மாரிமுத்து, நாகலட்சுமி, முத்து சங்கர், பிச்சை முனீஸ்வரன், கார்த்திக் ராஜா, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மீனா குமாரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி பழனி குமார், பத்மாவதி, பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post