கோவில்பட்டி பூங்காவில் மரங்களை அகற்றிவிட்டு கட்டடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு!

கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவில் உள்ள மரங்களை அகற்றிவிட்டு கட்டடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்

கோவில்பட்டியில் ராமசாமிதாஸ் என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா அமைப்பதற்காக பெரியோர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் 20 சதவீத இடத்தை தீயணைப்புத் துறையினரும், 50 சதவீத இடத்தை நகராட்சியின் பயன்பாட்டிற்கும், எஞ்சிய 30 சதவீத இடத்தில் தான் ராமசாமிதாஸ் பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கு, மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்காக பூங்காவில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற இருப்பதாக தெரிய வருகிறது.

எனவே, பூங்காவை அழிக்காமல் மக்களின் பயன்பாட்டிற்கே விட வேண்டும், மரங்களை அகற்றிவிட்டு மையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும், மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக நகரச் செயலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நகர பொதுச்செயலர் முனியராஜ், அமைப்புசாரா மாவட்ட துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் குருதேவன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சீனிவாசன் ஆகியோர் நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post