தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் மாவட்டத்திலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் டெலஸ்கோப்பை வரவழைத்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.
ஆண்டிபட்டி ஜெய் கிரிஸ் பள்ளியில் ஆகாய வான்பரப்பை ஆய்வு செய்யும் விதமாகவும் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் விதமாகவும் இன்று ஸ்கை அப்சர்வேஷன் டே எனப்படும் வான் பரப்பை ஆய்வு செய்யும் நாள் என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது . இரவில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பிரத்தியேகமாக மாணவர்களும் பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு முதல்கட்டமாக பள்ளி அறையில் வான்பரப்பில் உள்ள கோள்கள், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தத்ரூபமாக வரைந்து காட்சிப்படுத்தப்பட்டவற்றை மாணவர்களே விளக்கினார்கள் . இதையடுத்து பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்தர டெலஸ்கோப் கருவி பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டு பள்ளி மைதானத்தில் உள்ள மேடையில் வைக்கப்பட்டு ஆகாயத்தில் உள்ள ஒளிரும் நட்சத்திரங்கள் காட்டப்பட்டன . குறிப்பாக பிரகாசமாக மிளிரும் 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆஷ்ட்ரஸ் என்ற நட்சத்திரம் குறித்து பயிற்சி பெற்ற மாணவர்கள் விளக்கினார்கள் . மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் டெலஸ்கோப் வழியாக நட்சத்திரங்களை கண்டுவியந்தனர் . மேலும் விண்ணில் ஒரு பார்வை , பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு ,
நட்சத்திரங்கள் குறித்த ஒரு பார்வை , நிலவின் மேற்பரப்பு , சப்தரிஷி மண்டலம் ஒரு பார்வை , கோள்கள் ஒரு பார்வை , வெள்ளி, செவ்வாய்க்கோள்களை செயல்முறை விளக்கமாக பார்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன .