அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்க கூடிய ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமநாதசுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று பங்குனி மாதத்தில் வரக்கூடிய அம்மாவாசை தினம் என்பதால் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் செய்தால் முன்பு செய்த பாவங்கள் போக்கி மோட்சம் கிட்டும் என்று ஒரு ஐதீகம். இதையடுத்து வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி விட்டு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.