எங்கள் வீதியில் எங்கள் தலைவர் பெருமிதம் கொள்கிறது சூலூர்


மார்ச் 14

கோவை மாவட்ட சூலூர் பேரூராட்சியில் புதியதாக பேரூராட்சி தலைவர் பதவி ஏற்றுள்ள திருமதி தேவிமன்னவன் பம்பரமாக சுழல்கிறார் 

ஒவ்வொரு நாளும் நாற்காலியை அலங்கரிப்பது தலைவர் பதவியல்ல களத்தில் நின்று நாள்தோறும் நாலுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வைக் காண்பதே அதற்கு அழகு என்கிறார் இயல்பாக

ஓட்டுக்கேட்க மட்டுமே மக்களைத்தேடி வருவார்கள் அரசியல்வாதிகள் என்ற பிம்பத்தை உடைத்தெறிகிறார் எங்கள் தலைவர் என்று உற்சாகத்தோடு நம்மோடு உரையாடினார் 11வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி வசந்தகுமார் 

நாங்கள் எங்கள் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து அறிக்கை கொடுத்தாலும், எங்கள் தலைவரே நேரில் வந்து மக்களோடு உரையாடி குறைகளைக் கேட்டறிகிறார் தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வருகிறது, சாக்கடை சுத்தப்படுத்தப்படுகிறதா, தெருவிளக்கில் ஏதாவது கோளாறு இருக்கிறதா போன்ற, பல அன்றாட மக்கள் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிவதோடு குறிப்பெடுத்து கொண்டு நிறையும் காண்கிறார் 

அதைக்கண்ட மக்கள் சந்தோஷப்படுவதைவிட, எங்களைப்போன்ற கவுன்சிலர்களுக்கு உற்சாகம் வருகிறது, இன்னும் மக்களுக்கு எவ்வளவு சிறப்பாக நம்மால் பணி செய்ய முடியும் என்று உற்சாகமாகப் பதிலளிக்கிறார் கவுன்சிலர் விஜயலட்சுமி வசந்தகுமார் தலைவன் எவ்வழியோ அதற்கு கீழ் உள்ளவர்களும் அவ்வழியே என்பதை, ஆதாரப்பூர்வமாக இது உணர்த்துகிறது என்றனர் ஆனந்தமாக சூலூர் பொதுமக்கள்.

Previous Post Next Post