நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நெகிழிக்கு பதிலாக துணிப்பைகளை இலவசமாக வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக அரசின் வழிகாட்டுதலால் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா எதிர்காலத்தினை அமைத்திட சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருந்திடும் வகையில் மக்கள் அனைவரும் நெகிழி பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை அல்லது துணி பைகளை பயன்படுத்த வேண்டி ஒரு மாற்றத்திற்கான வழியாக விழிப்புணர்வு தந்திட நெல்லை வண்ணாரபேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட  அமைப்பின் சார்பாக 10 ஆயிரம் இலவச துணி பைகள் பொதுமக்களுக்கு வழங்கிடும் விழிப்புணர்வு நிகழ்வினை கல்லூரி வளாகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஸ்கார்ட் கல்வி குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் பாபு, துணை முதல்வர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வேல்முருகன் மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தினர் செய்திருந்தனர்.




Previous Post Next Post