தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பயனாளிக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன், மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், திட்ட இயக்குனர் தண்டபானி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.