தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன்,
தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பால்ராஜ் என்பவருக்கு ரூ.69,000 மதிப்பிலான செயற்கை கால், ராணி என்பவருக்கு ரூ.25,500மதிப்பிலான செயற்கை கால்,
குருசங்கர் என்பவருக்கு ரூ.25,500 மதிப்பிலான செயற்கை கால் என ஆக மொத்தம் ரூ.1,20,000 மதிப்பிலான செய்றகை கால்களை வழங்கினார்கள். மேலும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 10 நரிக்குறவர் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.