பெருந்துறை பஸ் நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெருந்துறையை சுற்றி தொழில் நிறுவனங்களும் கல்லூரி நிறுவனங்களும் அதிக அளவில் காணப்படுவதாலும் மேலும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அமைந்திருப்பதாலும் தினசரி நோயாளிகளும் வந்து போகும் இடமாக இருப்பதாலும் கோவையில் இருந்து வருபவர்களுக்கு ஈரோடு பவானி மேட்டூர் சேலம் செல்லும் முக்கிய சந்திப்பாக இருப்பதால் எப்போதும் கூட்டம் நிறைந்தே பஸ்நிலையம் காணப்படும். இந்நிலையில் இன்று தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தின் காரணமாக அரசு பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. இதனால் பெருந்துறை பஸ் நிலையம் அரசு பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலும் தனியார் பேருந்துகளின் இயக்கம் அதிகமாக இருந்தது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வர்களும் அலுவலக பணிகளுக்கு செல்வர்களும் நோயாளிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். டவுன் பேருந்துகள் எதுவும் இயங்காத காரணத்தால் தனியார் பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிச் செல்கின்றனர்.