தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.
1548 வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு சுமார் 100 தொழில் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இத்துடன் 6 திறன் வளர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் காலை முதலே ஆண்களும் பெண்களும் ஏராளமாக கலந்து கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்து வந்தனர்.
மாலை வரையில் நடைபெறும் இந்த முகாமில் 12 மணி வரை நிலவரப்படி 1712 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். இதில் 512 ஆண்களுக்கும் 347 பெண்களுக்கும் வேலை வாய்ப்பிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி பெற்றவர்களில் 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட எஸ்.பி முனைவர் பாலாஜி சரவணன் முன்னிலையில்
திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் 35 பேருக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினார்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமை நேரில் ஆய்வு செய்த பின்னர் பேசிய கனிமொழி எம்.பி தமிழக அரசு படித்த ஆண்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது.
இதில் கலந்து கொண்டுள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வேலையினை ஏற்றுக்கொண்டு பணியினை செய்திட வேண்டும். ஒருவேளை தங்களுக்கு ஏற்றார்போல் வேலை இல்லை என்று நினைத்தால்
தொடர்ந்து இங்கு தங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை கொண்டு அடுத்தகட்டமாக பணியினை தேடலாம். மாறாக இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தாமல் இருப்பது இன்னும் வேலை கிடைக்கும் நிலையை கடினமாக்கும்.
எனவே இதுபோன்ற முகாம்களை வேலை வாய்ப்பு தேடுபவர்கள் தைரியமாக நன்றாக பயன்படுத்த வேண்டும். அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் , திட்ட அலுவலர், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வீரபத்திரன், திருநெல்வேலி வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் மகாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பேச்சியம்மாள், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி ஜெயசீலி அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் நிர்மல் ராஜ் சரண்யா சுரேஷ்குமார் அன்னலட்சுமி மரிய கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.