திம்பம் மலைப்பாதை இரவு போக்குவரத்து தடை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் தலைமையில் அனைத்து அமைப்பினர் ஆலோசனை.


சத்தியமங்கலம் - மார்ச்-16

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மைசூர்- தேசிய நெடுஞ் சாலையில் அமைந்து ள்ள,சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட, திம்பம் மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில்,பகல் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலால்,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் சூழ லில்,சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் இரவுநேரங் களில் வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், 

முன்னாள் அமைச்சரும், அதி முக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. ஏ.செங்கோட்டையன்தலைமை யில், பவானிசாகர் எம்.எல்.ஏ அ.பண்ணாரி முன்னிலையில் சத்திய மங்கலத்தில் ,தனியார் திருமண மண்டபத்தில் சத்திய மங்கலம் அனைத்து அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இக் கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், சத்திய மங் கலம் திம்பம் மலைப்பாதை இரு மாநிலங்களுக்குஇடையே பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி,மக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்குபயன் படும் காய்கறிகள் உணவுப் பொருட்கள் மற்றும் மலர் பொருட்களை கொண்டு செல் கிற பிரதான பாதையாகவும் விளங்குகிறது. 

இரவு நேர போக்குவரத்து தடை என்பது மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை  சமீபத்தில் சட்டமன்ற உறுப்பி னர்  பண்ணாரியும், நானும் சென்று,மாவட்ட ஆட்சித் தலை வரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தும்,. 

வருகிற 24-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது,  மாவட்ட ஆட்சித் தலை வரின் அறிக்கை மீது ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டும், எதிர் வரும் சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத் தொட ரில் பூஜ்ஜிய நேரத்தில் இது குறித்துகேள்வி எழுப்பிஅரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், 

சட்ட ரீதியான அணுகு முறைக்கு முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியின் ஆலோசனையை பெற்றிருப்ப தாகவும், விரைவில் இது குறித்து முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் பங் கேற்ற பல்வேறு அமைப்பினர் ஒன்று கூடி ,இதுகுறித்து தீர் மானம்  நிறைவேற்றித் தரும் படியும் கேட்டுக் கொண்டார். 

கூட்டத்தில் முன்னதாக ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின்சிவக்குமார்,சுற்றுலா வாகன உரிமை யாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, சத்தியமங்கலம் லாரி உரிமை யாளர் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ். பொன்னுசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

கூட்டத்தில் சத்திய மங்கலம் அனைத்து வணிகர் சங்கம், அனைத்து வியாபாரி கள் சங்கம், லாரி உரிமை யாளர்கள் சங்கம், சத்திய மங்கலம் மினிலாரி உரிமை யாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுக நகரச் செயலாளர், எஸ்.வி. கிருஷ்ண ராஜ், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் எஸ்.ஆர்.பி. வெங்கிடுசாமி, ஒ.எம்.சும்பிர

மணியம்,சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என் என்.சிவராஜ், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, டி.எஸ்.பழனிசாமி, ஏ.டி.சரசுவதி, வெ.பெ.தமிழ்ச் செல்வி உள்ளிட்ட அதிமுகவினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் அஞ்சல் செய்தியாளர் 

கே நாராயணசாமி சத்தியமங்கலம்

Previous Post Next Post