மின்சார ரயில் டிக்கெட்டுகள் இனி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெரும் வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் - மெட்ரோ நிர்வாகம் தகவல்.!


இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக குறிப்பில்..

மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாக திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்திலிருந்து அவர்கள் சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது 16 மெட்ரோ இரயில் நிலையங்களில் ரேபிடோ பைக், உபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி, ஸ்மார்ட் பைக் வசதி, 12 மெட்ரோ இரயில் நிலையங்களில் இணைப்பு பேருந்துகள், 5 மெட்ரோ இரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகள். எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே பயணச்சீட்டை இந்த மூன்று மெட்ரோ இரயில் நிலையங்களிளும் பெரும் வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்.

இதைதவிர, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து ஐ.டி. மற்றும் தனியார் பெறு நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பயணிகளின் எண்ணிக்கை 1.13 லட்சமாக இருந்தது. இம்மாதம் (மார்ச்) 18-ம் தேதி வரை பயணிகளின் எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் செய்து வருவதை ஒட்டி பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது

#ChennaiMetro

Previous Post Next Post