லோக்சபாவில் பூஜ்ய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையை குறிப்பிட்டு, மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, தேர்தல் விளம்பரங்களுக்கு பாஜகவுக்கு குறைந்த விலையில் சலுகைகளை ஃபேஸ்புக் வழங்கியதாக குற்றம் சாட்டியதுடன், இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக் தலையீட்டை நிறுத்துங்கள் கூறினார்.
பேஸ்புக் மூலம் பாஜக பிரசாரம் செய்தது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது; ஜனநாயகத்தை பாதுகாக்க சமூக வலைதளத்தை விதிக்கு புறம்பாக பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்
அரசு அமைப்புகளின் உதவியுடன் விதிகளை மீறி பேஸ்புக் மூலம் பாஜக பிரசாரம் செய்துள்ளது - மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை , இந்தியாவின் தேர்தல் அரசியலில் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக ஜாம்பவான்களின் "முறையான தலையீட்டிற்கு" முற்றுப்புள்ளி வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார் .
“உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தேர்தல் அரசியலில் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் முறையான தலையீடு மற்றும் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது,'' என்றார்.
யார் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று காந்தி மேலும் கூறினார்