மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், தொழிற்சங்க சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதனையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சத்தி வட்டக் கிளை செயலர் முத்துசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்.சரத் அருள்மாறன், அரசு ஊழியர் சங்க சத்தி வட்ட கிளை நிர்வாகிகள் ராக்கி முத்து, செந்தில்நாதன்,
சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க ரகு, பழனிசாமி, கார்த்தி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க கலைவாணி, வித்யா, கவிதா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.