ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிக்கிறது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!


தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பே இல்லை - ஒரே நாடு ஒரே தேர்தல் இன்றைக்கு அல்ல  என்றைக்குமே  அதிமுக ஆதரித்து வருகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்குடை கட்டடத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 


இதனை தொடர்ந்து நாலாட்டின்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்குடை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும் கோவில்பட்டி அத்தை கொண்டான் ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்பிலான நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்தார். 

பின்னர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் : 


ஒரே நாடு ஒரே தேர்தல் இன்றைக்கு அல்ல  என்றைக்குமே  அதிமுக ஆதரித்து வருகிறது

பிரதமர் மோடி நாட்டு மக்கள் நலன் கருதி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரதமரான இதிலிருந்து கருத்தை சொல்லி வருகிறார் அதே கருத்தைத்தான் தேர்தல் ஆணையரும் கூறியுள்ளார்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் தேர்தல் நடந்தால் பொருளாதார வீக்கம் குறையும் பிரிவினைகள் குறையும் என்ற எண்ணத்தில்தான் தேர்தல் ஆணையரும் கூறியுள்ளார்

மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள் சுமூகமான ஒரு நிலை நிலவுவதற்கு அதற்கும் தேர்தல் ஆணையம் தயாராக என்ற கருத்தை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது

அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து இருந்தாலும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி இருப்போம் அதிமுகவில் எந்த முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் பொதுக்குழு கூடி தான் முடிவு செய்யும் இது அதிமுகவில் மட்டுமல்ல திமுகவிலும் தான்

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பே இல்லை 57 ஆண்டுகளாக தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லை என்ற நிலையில் திராவிட ஆட்சிதான் தமிழக வாக்காளர் மனதில் என்றைக்குமே திராவிட கட்சியும் என்ற நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது

பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் காரணமாக வெற்றியடைந்துள்ளது அங்கு பொருத்தமாக இருந்தது தவிர தமிழகத்திற்கு அது பொருந்தாது. 

பாஜக வெற்றி பெற்றது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஏனென்றால் காங்கிரஸ் வலுவான நிலையில் இல்லை காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்யக் கூடிய நிலையில் உள்ளது அதிமுகவில் தேவையான நேரத்தில் வழிகாட்டுதல் குழு ஆலோசனையை கூறுவார்கள்

அதிமுகவின் இரட்டை தலைமையில் வந்த பிறகு வாக்கு வங்கியில் ஏதும் குறையவில்லை மோசமான தோல்வியை எதையும் சந்திக்க வில்லை அதிமுக தன்னதனியாக போட்டியிட்டோம் ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் ளோடு போட்டியிட்டது தமிழகத்தில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட குழு தலைவி சத்யா, 

ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர் மற்றும் நகரமன்ற உறுப்பினர் கவியரசு, நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மேற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், 

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர் ஹேமலா செல்வக்குமார், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நாலாட்டின்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் கடல் ராணி அந்தோணிராஜ், ஊராட்சி செயலாளர் ராமசாமி,அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,கோபி,பழனி குமார்,முருகன், உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்,


Previous Post Next Post